X
ഹോം ടോപ് ലിസ്റ്റിങ്ങ്‌

ஹிந்தி சினிமாவை ஓரங்கட்டி இந்திய அளவில் லியோ படத்திற்கு முதலிடம்

Author: Sakthi Harinath | Published: Wednesday, December 13, 2023, 02:24 PM [IST]

ஹிந்தி சினிமாவை ஓரங்கட்டி இந்திய அளவில் லியோ படத்திற்கு முதலிடம், என்ன விவரம் தெரியுமா. லியோ படம் வெளியாகி பல இடங்களில் சாதனை படைத்துள்ள நிலையில், தற்போது இந்த ஆண்டு எந்த படமும் படைக்காத பிரமாண்ட சாதனையை படைத்து இந்திய அளவில் முதல் இடம் பிடித்துள்ளது. முதல் நாள் வசூல் கலக்ஷன் ரிப்போர்ட் அடிப்படையில் லியோ படம் இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது. முழு விவரங்கள் இதோ.

Share:
cover image
Video Thumbnail

லியோ - லியோ

லியோ - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா கிருஷ்ணன், மன்சூர் அலிகான், அர்ஜுன் என தமிழ் திரைப்பட முன்னணி முக்கிய நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தமிழ் சினிமா முன்னணி தயாரிப்பாளரான லலித் குமார் தனது '7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

Video Thumbnail

கதை - லியோ - கதை

ஒரு பேக்கரி & காபி ஷாப் ஓனராக காஸ்மீரில் வாழ்ந்து வருகிறார், பார்த்திபன் (விஜய்). இவரின் மனைவி சத்யா (திரிஷா கிருஷ்ணன்) மற்றும் இவரது குழந்தைகளாக இயல் & மதேவ் தாமஸ் நடித்துள்ளனர். அமைதியான ஒரு அழகான வாழ்க்கையை வாழும் இவர்களுக்கு தீடிரென சாண்டி மாஸ்டர் & மிஸ்க்கின் வருகையால் ஒரு பிரச்சனை தொடங்குகிறது. இதனால் அந்த இடத்தில் பிரபலமாகும் விஜய் பத்திரிக்கை & பல இடங்களில் பிரபலமாக பேசப்படுகிறார்.


மக்கள் மத்தியில் பிரபலமான விஜய்-யின் புகைப்படம் தவறுதலாக வில்லன்களுக்கு கிடைக்கிறது. பின் வில்லன் விஜய்-யை தேடி பழிவாங்க வருகிறார்.


ஆன்டனி தாஸ் (சஞ்சய் தட்) இவரது தம்பி ஹரோல்ட் தாஸ் (அர்ஜுன்), ஆன்டனி தாஸ்-ற்கு இரண்டு குழந்தைகள் (லியோ தாஸ் - விஜய் & மடோனா செபாஸ்டின்). மூட நம்பிக்கையில் அதிக ஆர்வம் கொண்ட ஆன்டனி தாஸ், ஒரு கட்டத்தில் தனது பிள்ளைகளை நரபலி கொடுக்க திட்டமிடுகிறார்.


அதிலிருந்து தப்பிக்கும் விஜய் & மடோனா இருவரும், தீ விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக பலர் நம்புகின்றனர். ஆனால் பார்த்திபனை லியோ என நினைத்து பலி தீர்க்க வருகின்றனர், சஞ்சய் தட் & அர்ஜுன். இறுதியில் என்ன ஆனது என்பதே படத்தின் கதை. லியோ - பார்த்தி இருவருக்கும் என்ன ஒற்றுமைகள் உள்ளன, இறுதியில் என்ன ஆனது என்பதே படத்தின் கதை.


இப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கும் LCU பட வரிசையில் இடம்பெற்றுள்ளது. இப்படத்தின் இறுதியில் நடிகர் கமல் ஹாசனின் குரல் விஜய்-யை தனது இயக்கத்தோடு இணைந்து போராடா அழைக்கிறது.

Video Thumbnail

விமர்சனம் - லியோ - விமர்சனம்

லியோ படம் விமர்சனம் ரீதியாக மக்கள் மத்தியில் பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை. இப்படம் வசூல் ரீதியாக சாதனை படைத்திருந்தாலும் ரசிகர்களின் விமர்சனங்களை கவர தவறியது. பல படங்களின் சாயல் இருப்பதாக இப்படம் குறித்து விஜய்யின் ரசிகர்கள் கூறியுள்ளனர்.


Video Thumbnail

வசூல் சாதனை - லியோ - வசூல் சாதனை

லியோ படம் இந்த ஆண்டின் மிக பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது. இப்படம் உலகளவில் மொத்தம் 605 முதல் 620 கோடிகள் வரை வசூல் செய்துள்ளதாக திரையுலக விமர்சகர்கள் பலர் கூறியுள்ளனர். மேலும் இப்படத்தின் வசூல் குறித்து இணையதள விக்கிப்பீடியா என்ற பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வசூல் ரீதியாக இப்படம் தயாரிப்பு நிருவத்திற்கு மிக பெரிய லாபத்தை பெற்ற தந்துள்ளது.


Video Thumbnail

முதலிடத்தில் லியோ - முதலிடத்தில் லியோ

லியோ படம் வெளியாகி வசூல், புக்கிங் என பல இடங்களில் சாதனை படைத்துள்ள நிலையில், தற்போது இந்திய அளவில் முதல் பிடித்து மிகப்பெரிய சாதனை படைத்திருக்கிறது. முதல் நாள் வசூல் அடிப்படையில் இப்படம் பல திரையரங்கில் வெளியாகி முதல் நாளில் மட்டும் 148 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இமாலய சாதனை படைத்திருக்கிறது. எந்த இந்திய திரைப்படம் படைக்காத சாதனையை படைத்து இந்த ஆண்டின் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது, தளபதி விஜய்யின் லியோ.

Disclaimer

The images featured on this page are sourced from publicly available platforms, official press releases, and promotional materials. These images are published strictly for editorial, informational, and news reporting purposes under the principles of fair use.
We do not claim ownership of any images unless explicitly stated. All image copyrights belong to their respective photographers, production houses, or copyright holders.
If you are the rightful owner of any image and believe that its use on this website is unauthorized or objectionable, please contact us ([email protected]) with proper details. We will promptly review and remove the content if required.


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+