X
ഹോം ടോപ് ലിസ്റ്റിങ്ങ്‌

'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாராவின் அன்னபூரணி பாக்ஸ் ஆபிஸ் - வாஸ் அவுட்

Author: Sakthi Harinath | Published: Monday, December 4, 2023, 04:27 PM [IST]

'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாராவின் அன்னபூரணி பாக்ஸ் ஆபிஸ் - வாஸ் அவுட் பற்றிய முழு தகவல்கள் இங்கு விரிவாக உள்ளன. 'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் 2023, டிசம்பர் 1ல் திரையரங்கில் வெளியான அன்னபூரணி திரைப்படம் பெரிய அளவில் தமிழக பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தில் சரிவை கண்டுள்ளது. இதனை பற்றிய முழு தகவல்கள் இங்கு உள்ளன, இதோ.

Share:
cover image
Video Thumbnail

அன்னபூரணி - அன்னபூரணி

அன்னபூரணி - இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ஆர் ரவீந்திரனின் 'ட்ரைடென்ட் ஆர்ட்ஸ்' நிறுவனம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் நடிகை நயன்தாரா திரைவாழ்வில் அவர் நடிக்கும் 75 வது படமாகும். இப்படத்தில் இவருடன் இணைந்து ஜெய், சத்யராஜ், ரேணுகா, அச்சுயுத் குமார் என பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். 


அன்னபூரணி படத்திற்கு ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிரவீன் அந்தோணி எடிட்டிங் செய்துள்ளார். இப்படம், 2023 டிசம்பர் 01ல் உலகமெங்கும் திரையரங்கில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு' சான்றிதழ் அளித்துள்ளது. இப்படத்தினை 'ஜீ ஸ்டுடியோஸ்', 'நாட் எஸ் ஸ்டுடியோஸ்' மற்றும் 'ட்ரிடென்ட் ஆர்ட்ஸ்' நிறுவனம் இணைந்து தயாரித்து தற்போது ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் விநியோகம் செய்துள்ளது.

Video Thumbnail

கதை - கதை

ஒரு ஆச்சாரமான பிராமண குடும்பத்தில் பிறக்கிறார், நயன்தாரா. சிறு வயதில் இருந்தே இவருக்கு சமையல் கலையின் மீது அதிக ஆர்வம் ஏற்படுகிறது. ஒரு பெரிய சமையல் வல்லுனராக ஆக வேண்டும் என்ற கனவோடு வளரும் நயன்தாரா, ஒரு கட்டத்தில் பிராமண குடும்பத்தில் பிறந்ததால் சமையல் கலையில் பணியாற்ற முடியாது என்பதை அறிகிறார். ஏனெனில் சமையல் தொழில் செய்பவர்கள் சைவம் மற்றும் அசைவம் என பல உணவுகளை சமைக்க நேரிடும் என்பது தான்.


நயன்தாராவின் தந்தை அச்யுத் குமார் ஸ்ரீரங்கம் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றி வருபவர். இதனால் நயன்தாராவின் சமயல் வல்லுனராகும் கனவுக்கு பெரிய தடங்கல் ஏற்படுகிறது. நயன்தாரா தனக்கு பிடித்ததை செய்ய வேண்டும் என்ற முடிவெடுத்து, MBA படிப்பதாக சொல்லி, ஒரு கேட்டரிங் கல்லூரியில் சேர்கிறார். பின் ரகசியமாக ஒரு சமையல் போட்டியில் கலந்து கொள்கிறார். இறுதியில் நயன்தாரா பல தடைகளை தாண்டி தனது கனவை சாதித்தாரா இல்லையா என்பதே அன்னபூரணி திரைப்படத்தின் கதை.

Video Thumbnail

விமர்சனம் - விமர்சனம்

நயன்தாரா திரைப்பயணத்தில் இவர் நடித்துள்ள 75வது படமான, அன்னபூரணி திரைப்படம் விமர்சனம் ரீதியாக மக்கள் மத்தியில் வரவேற்பினை பெற தவறியது. இப்படத்தின் திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லை என்பது தான் ரசிகர்களின் கருத்து. சமூக வலைத்தளத்தில் இப்படத்தினை விமர்சித்து பலர் தங்களின் கருத்துகளை போஸ்ட் செய்து வருகின்றனர்.

Video Thumbnail

பட்ஜெட் & வசூல் - பட்ஜெட் & வசூல்

அன்னபூரணி திரைப்படத்தின் வசூல் பெரிய அளவில் தோல்வி அடைந்துள்ளது. இப்படத்திற்காக நடிகை நயன்தாரா 6 கோடிகளுக்கு மேல் சம்பளமாக பெற்றுள்ளார். ஆனால் இப்படம் வெளியான முதல் 3 நாட்களில் 2 கோடிகளை கூட தாண்டவில்லை என பல திரைப்பட விமர்சகர்களால் கூறப்படுகிறது. அன்னபூரணி படத்தின் மொத்த பட்ஜெட் 10 கோடிகளுக்கு மேல் உள்ளது.


வசூல் ரீதியாக இப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்துள்ளது. மேலும் இப்படம் வெளியான நாளில் இருந்து சென்னையில் மழை, இப்படத்தின் வசூலில் தடுமாற்றம் அடைய இதுவும் ஒரு காரணமாக கருதப்படுகிறது.


Video Thumbnail

பாக்ஸ் ஆபிஸ் - வாஸ் அவுட் - பாக்ஸ் ஆபிஸ் - வாஸ் அவுட்

சென்னையில் பெய்து வரும் மழை அதனால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணத்தால் பெரும் நகரமான சென்னையில் இப்படத்தின் வசூல் பெரிய சரிவை கண்டுள்ளது. இப்படத்தின் விமர்சனம் ரசிகர்களை கவர தவறியதால் இப்படத்தின் திரையரங்கு வசூல் உலகம் முழுவதும் குறைந்துளளது. அன்னபூரணி திரைப்படம் தமிழக பாக்ஸ் ஆபிஸ் பட்டியலில் இடம் பெறாமல், வாஸ் அவுட் ஆகியுள்ளது. அன்னபூரணி திரைப்படம் நடிகை நயன்தாராவின் 75வது திரைப்படமாகும். நயன்தராவின் திரைப்பயணத்தில் இப்படம் மிக பெரிய தோல்வி சந்தித்த திரைப்பட பட்டியலில் இப்படமும் தற்போது இடம் பெற்றுள்ளது.

Disclaimer

The images featured on this page are sourced from publicly available platforms, official press releases, and promotional materials. These images are published strictly for editorial, informational, and news reporting purposes under the principles of fair use.
We do not claim ownership of any images unless explicitly stated. All image copyrights belong to their respective photographers, production houses, or copyright holders.
If you are the rightful owner of any image and believe that its use on this website is unauthorized or objectionable, please contact us ([email protected]) with proper details. We will promptly review and remove the content if required.


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+