X
ഹോം ടോപ് ലിസ്റ്റിങ്ങ്‌

பொன்னியின் செல்வன் 02 முதல் பாகத்தின் வசூலை முறியடிக்குமா?

Author: Sakthi Harinath | Published: Wednesday, April 26, 2023, 02:15 PM [IST]

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் திரைப்படம், பொன்னியின் செல்வன். இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி தற்போது இரண்டாம் பாகம் 2023 ஏப்ரல் 28ல் வெளியாக தயாராகவுள்ளது. விரைவில் வெளியாகும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் முதல் பாகத்தின் வசூலை முந்துமா? என விரிவாக பார்க்கலாம்.

Share:
cover image
1

தமிழ் சினிமாவில் பல முன்னணி பிரபலங்களால் முயற்சிக்கப்பட்டு இறுதியில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ளது, எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன். இந்த பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக இயக்க எம் ஜி ஆர், பாரதிராஜா, கமல் ஹாசன் என பல பிரபலங்கள் முயற்சித்தும் இப்படத்தினை இயக்க முடியவில்லை. இறுதியில் இயக்குனர் மணிரத்னம் மூன்று முறை முயற்சி செய்து பல போராட்டங்களுக்கு பின்னர் இந்த நாவல் கதையை படமாக இயக்கியுள்ளார்


பொன்னியின் செல்வன் (PS 1)
2

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என பல முன்னணி பிரபலங்கள் நடிப்பில் பிரமாண்ட முறையில் உருவாக்கப்பட்டு தமிழ் சினிமாவில் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 30ல் வெளியான திரைப்படம், பொன்னியின் செல்வன் முதல் பாகம். இப்படம் பெரிய அழகில் தமிழ் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்று கொண்டாடப்பட்டது. உலகளவில் இப்படம் 500 கோடிகள் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இப்படத்திற்கு இயக்குனர் மணிரத்னமின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க, தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தானது லைக்கா தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.

കൂടുതല്‍ കാണാം

பொன்னியின் செல்வன் 2
3

2023 ஏப்ரல் 28ல் உலகளவில் பொன்னியின் செல்வன் 02 திரைப்படம் திரையரங்கில் வெளியாகிறது. இப்படத்தினை தயாரித்த லைக்கா நிறுவனம் பொன்னியின் செல்வன் 2 படத்தினை உலகம் முழுவதும் விநியோகம் செய்கிறது. இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக இந்தியா முழுவதும் நடந்து வருகிறது. பொன்னியின் செல்வன் 02 படத்தினை தமிழகத்தில் மட்டும் உதயநிதி ஸ்டாலினின் 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' விநியோகம் செய்கிறது.

 

കൂടുതല്‍ കാണാം


4

பிரமாண்ட முறையில் உருவாக்கப்பட்டு தற்போது வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் 02 திரைப்படம் முதல் பாகத்தை விட அதிக வசூல் படைக்குமா என்னும் சந்தேகம் ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் மத்தியில் எழுந்துள்ளது. முதல் பாகம் 500 கோடிகள் வசூல் படைத்தது பிரமாண்ட வெற்றி பெற்றுள்ள நிலையில், தற்போது இரண்டாம் பாகம் அதனை விட வசூல் செய்ய வேண்டும். ஆனால் தற்போது இப்படத்தின் மேல் தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு பெரிய அளவில் ஈடுபாடு இல்லை என்று சில விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், சற்று வருத்தத்தில் உள்ளது பொன்னியின் செல்வன் படக்குழு.

5

ஓடிடி, தொலைக்காட்சி உரிமை என மற்ற வியாபாரங்களில் பொன்னியின் செல்வன் 02 திரைப்படம் பெரிய அளவில் வியாபாரம் செய்துள்ளது. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது. தமிழில் சன் தொலைக்காட்சியில் இப்படம் வெளியாகிறது.


Disclaimer

The images featured on this page are sourced from publicly available platforms, official press releases, and promotional materials. These images are published strictly for editorial, informational, and news reporting purposes under the principles of fair use.
We do not claim ownership of any images unless explicitly stated. All image copyrights belong to their respective photographers, production houses, or copyright holders.
If you are the rightful owner of any image and believe that its use on this website is unauthorized or objectionable, please contact us ([email protected]) with proper details. We will promptly review and remove the content if required.


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+