X
ഹോം ടോപ് ലിസ്റ്റിങ്ങ്‌

ஸ்ரீதேவி, எமி ஜாக்சன் என திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான இந்திய திரைப்பட நடிகைகள்

Author: Sakthi Harinath | Published: Tuesday, September 6, 2022, 05:31 PM [IST]

பாலிவுட் & இந்திய திரைப்பட நடிகைகள் பலர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி உள்ளனர். பாலிவுட் நடிகை கல்கி கெக்லா திருமணத்திற்கு முன்பே தான் கர்ப்பமாக உள்ள செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார். அச்சமயம் அவர் ரசிகர்கள் மத்தியில் பல விமர்சனங்களை சந்திக்க நேரிட்டது. ஆனால் எந்த விமர்சனமும் கல்கியை பாதிக்கவில்லை. கல்கி தனது கர்ப்பத்தை ரசித்து தனது முழு வயிறு போட்டோஷூட்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வந்துள்ளார். இந்த பட்டியலில் பாலிவுட் நடிகைகள் கல்கி கேக்லா போல திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் ஆன நட்சத்திரங்களின் பட்டியல் உள்ளன.

Share:
cover image
ஸ்ரீதேவி கபூர்
1

ஹிந்தி மற்றும் தென்னிந்திய திரைப்படங்களில் அதிலோக சுந்தரி என்று அழைக்கப்பட்ட புகழ் பெற்ற நடிகை, ஸ்ரீதேவி. இவர் ஹிந்தி திரைப்பட தயாரிப்பாளரான போனி கபூரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமான போது ஸ்ரீதேவி 7 மாத கர்ப்பிணியாக இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நடிகையே வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

കൂടുതല്‍ കാണാം


எமி ஜாக்ஸன்
2

மதராசபட்டினம், ஐ, 2.0 படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் புகழ் பெற்றவர். இவர் ஜனவரி 1, 2019ல் தனது காதலன் ஆன ஜார்ஜ் பனாயுடுவுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இவரின் நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு தான் கர்ப்பமாக இருந்ததை எமி வெளிப்படுத்தினார். இதனை தொடர்ந்து இவர் சமூக வலைதளங்களில் பேபி பம்ப் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். குழந்தை பிறந்தவுடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

കൂടുതല്‍ കാണാം

நேஹா தூபியா
3

ஹிந்தி சினிமாவில் அபிநயமான நடிகை நேஹா தூபியா. இவர் அங்கத் பேடி என்பவரை 2018ல் காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடி எந்த தகவலும் இல்லாமல் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி 3 மாதங்களுக்குப் பிறகு, நேஹா தூபியா தனது முதல் குழந்தையை எதிர்பார்க்கிறேன் என்று அறிவித்து ஆச்சரியப்படுத்தினார். இருவரும் நேஹாவின் கர்ப்பத்தை பல மாதங்களாக மறைத்து வைத்திருந்தனர்.


கொங்கனா சென் சர்மா
4


தேசிய விருது பெற்ற நடிகை கொங்கனா சென் சர்மாவும், நடிகர் ரன்வீர் சிங் ஷோரேயும் நீண்ட நாள் (LIVE-IN) உறவுக்குப் பிறகு 2010 இல் திருமணம் செய்து கொண்டனர். திருமணமான உடனேயே, அவர்கள் தங்கள் முதல் குழந்தையை எதிர்பார்க்கிறார்கள் என்று அறிவித்தனர். ஆனால் திருமணத்திற்கு முன்பே கொங்கனா கர்ப்பமாக இருந்தார். திருமணத்திற்குப் பிறகு, இது குறித்து நட்சத்திரங்கள் வெளிப்படையாகப் பேசினர்.

கல்கி கோச்லின்
5

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான மற்றொரு பாலிவுட் நடிகை கல்கி கோச்சிலின். நடிகை தான் ஐந்து மாத கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். திருமணத்திற்குப் புறம்பாக கர்ப்பம் தரித்ததற்காக கல்கி பல விமர்சனங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. நடிகையின் காதலன் கை ஹெர்ஷ்பெர்க்.

കൂടുതല്‍ കാണാം


அலியா பட்
6

ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் 14 ஏப்ரல் 2022 அன்று மும்பையில் உள்ள அவர்களது இல்லத்தில் பிரமாண்ட முறையில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் சில உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடந்தது. ஆலியா பட் தனது முதல் குழந்தையை எதிர்பார்க்கிறேன் என்று அறிவித்த பிறகு, திருமணத்திற்கு முன்பே ஆலியா பட் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் உலவுகின்றன

 

കൂടുതല്‍ കാണാം

சரிகா
7

தமிழ் சினிமாவின் முக்கிய முன்னணி நடிகரான கமல் ஹாசன், சரிகா என்பவரை காதல் திருமணம் செய்துள்ளார். நடிகை சரிகா கமல்ஹாசனுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். நடிகை சரிகா கர்ப்பம் தரித்த பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.


வீணா மாலிக்
8

பாகிஸ்தானைச் சேர்ந்த வீணா மாலிக் பாலிவுட் மற்றும் கன்னடப் படங்களில் நடித்துள்ளார். வீணா மாலிக் தனது காதலரான பிரசாந்த் பிரதாப் சிங்கிடம் இருந்து திருமணத்திற்கு புறம்பாக குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார். இதன் பிறகு, ஆஷாத் பஷீர் கானை திருமணம் செய்து கொண்டார்.

 

நடாஷா ஸ்டான்கோவிக்
9

செர்பிய நாட்டைச் சேர்ந்த நடிகை நடாஷா ஸ்டான்கோவிச், இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியவை 2020 ஜனவரியில் காதலிப்பதாக அறிவித்தார். பின்னர் அதே ஆண்டு மே 30ல் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஜூலை மாதம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.


தியா மிர்சா
10

2019 ஆம் ஆண்டு தனது முதல் கணவரிடமிருந்து பிரிந்த தியா மிர்சா, மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் வைபவ் ரெக்கியை 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 2 மாதங்களே ஆன நிலையில், தான் கர்ப்பமாக இருப்பதை தியா மிர்சா தெரிவித்தார்.

Disclaimer

The images featured on this page are sourced from publicly available platforms, official press releases, and promotional materials. These images are published strictly for editorial, informational, and news reporting purposes under the principles of fair use.
We do not claim ownership of any images unless explicitly stated. All image copyrights belong to their respective photographers, production houses, or copyright holders.
If you are the rightful owner of any image and believe that its use on this website is unauthorized or objectionable, please contact us ([email protected]) with proper details. We will promptly review and remove the content if required.


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+