X
ഹോം ടോപ് ലിസ്റ്റിങ്ങ്‌

Leo Movie: வசூல் ரீதியாக லியோ படத்தின் வெற்றி உறுதி... விமர்சன ரீதியில் வெற்றி பெறுமா?

Author: Sakthi Harinath | Published: Tuesday, October 17, 2023, 01:13 PM [IST]

Leo Movie: வசூல் ரீதியாக லியோ படத்தின் வெற்றி உறுதி... விமர்சன ரீதியில் வெற்றி பெறுமா?. லியோ திரைப்படம் இந்த வாரம் வெளியாகவுள்ள நிலையில் தற்போது இப்படத்தின் வெற்றி குறித்து பல முன்னணி விமர்சர்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதில் இப்படம் வசூல் ரீதியாக உலகளவில் பிரமாண்ட பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைக்கும் என கணித்த விமர்சகர்கள், இப்படம் விமர்சனம் ரீதியாக வெற்றி பெறுமா என்ற குழப்பத்தில் உள்ளனர், முழு விவரங்கள் இதோ.

Share:
cover image
Leo

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள அதிரடி - திரில்லர் திரைப்படம், லியோ. இப்படத்தினை தயாரிப்பாளர் லலித் குமார் '7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ்' நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.


லியோ படத்தில் தளபதி விஜய் நாயகனாக நடிக்க, அர்ஜுன், திரிஷா, சஞ்சய் தட், கவுதம் மேனன், பிரியா ஆனந்த், ஜனனி (பிக் பாஸ்), மதேவ் தாமஸ் என பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

കൂടുതല്‍ കാണാം


யு/ஏ சான்றிதழ்

2023 - அக்டோபர் 19ல் உலகமெங்கும் வெளியாகும் லியோ படத்தின் முதல் நாள் காட்சிக்கு தற்போது தமிழ் நாடு, கர்நாடக, கேரளா மாநிலங்களில் பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளன. பல இடங்களில் டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.


லியோ படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில், ஆன்லைன் ஓடிடி தளத்திற்கான ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

LCU-வில் லியோ

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கம் தனித்துவமான படங்களான LCU படவரிசையில் லியோ படம் இருக்குமா? இல்லையா? என்ற சந்தேகம் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. லியோ படம் LCU பட வரிசையில் இடம் பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளன என பலர் கூறியுள்ளனர், ஆனால் வெளிப்படையாக அதிகாரப்பூர் தகவல்களாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.


லியோ படத்தில் இடம்பெற்றுள்ள நடிகர் - நடிகைகளின் குழுவை அடிப்படையாக பார்த்தால், இத்திரைப்படம் LCU படவரிசையில் இடம்பெறுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது.


லியோ - வசூல் வேட்டை

லியோ படம் ரிலீசிற்கு முன்னரே ஆண்லன் புக்கிங் & விநியோகம் என பல இடங்களில் நல்ல லாபத்தை பெற்றுள்ளது. இதுவரை எந்த தமிழ் படமும் படைக்காத பிரமாண்ட சாதனையை லியோ படம் படைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தெரியவருகிறது. 300 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள லியோ திரைப்படம், அதைவிட லாபத்திற்கு பிஸ்னஸ் செய்துள்ளதா வெளியான தகவலை தொடர்ந்து, இப்படம் வசூலில் 1000 கோடிகளை வசூலிக்க வாய்ப்புள்ளதாக பலர் சமூக வலைத்தளத்தில் தங்கள் கருத்துகளை பதிவு செய்கின்றனர்.

லியோ - விமர்சனம்

வசூல் ரீதியாக லியோ படத்தின் வெற்றியை இச்சமையே உறுதி செய்துள்ள பலர், விமர்சனம் ரீதியான வெற்றிக்கு மௌனம் காக்கின்றனர். விஜய்யின் முந்திய படங்களான வாரிசு & பீஸ்ட் படங்கள் வசூல் ரீதியாக வெற்றி படமாக அறிவித்தாலும், விமர்சனம் ரீதியாக விஜய்யின் முந்திய படங்கள் தோல்வி திரைப்படங்கள் தான். இதனால் படம் ரிலீசிற்கு பின்னர் தான், லியோ படத்தின் விமர்சனம் பற்றிய கருத்துக்கள் கூறமுடியும் என பல பிரபலங்கள் & விமர்சகர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.


Disclaimer

The images featured on this page are sourced from publicly available platforms, official press releases, and promotional materials. These images are published strictly for editorial, informational, and news reporting purposes under the principles of fair use.
We do not claim ownership of any images unless explicitly stated. All image copyrights belong to their respective photographers, production houses, or copyright holders.
If you are the rightful owner of any image and believe that its use on this website is unauthorized or objectionable, please contact us ([email protected]) with proper details. We will promptly review and remove the content if required.


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+