X
ഹോം ടോപ് ലിസ്റ്റിങ്ങ്‌

Thug Life: சிலம்பரசன் மீது பொறாமையா? தக் லைஃப் படத்திலிருந்து வெளியேறினாரா ஜெயம் ரவி...

Author: Sakthi Harinath | Published: Thursday, May 9, 2024, 10:54 AM [IST]

Thug Life: சிலம்பரசன் மீது பொறாமையா? தக் லைஃப் படத்திலிருந்து வெளியேறினாரா ஜெயம் ரவி - முழு தகவல்கள் இதோ. இந்த பட்டியலில் நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் உருவாகி வரும் நிலையில், இப்படத்தில் இருந்து வெளியேறிய துல்கர் சல்மான் நடிகருக்கு பதில் சிலம்பரசன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார், பின் இப்படத்தில் இருந்து ஜெயம் ரவி விலகியுள்ளார், இதற்கான காரணம் பற்றிய முழு விவரங்கள் இங்கு உள்ளது.

Share:
cover image
தக் லைஃப்

தக் லைஃப் - இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நாயகனாக நடிக்கும் அதிரடி - திரில்லர் - கிரைம் திரைப்படம். இப்படத்தினை ரெட் ஜெயண்ட் மூவிஸ், ராஜ் கமல் பிலிம்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். பிரமாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் இந்த திரைப்படம் பெரிய நடிகர்கள் பலர் நடிக்க உருவாகி வருகிறது.

കൂടുതല്‍ കാണാം


Lead Stars

தக் லைஃப் திரைப்படத்தில் கமல் ஹாசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இவருடன் இணைந்து சிலம்பரசன், திரிஷா கிருஷ்ணன், அபிராமி, நாசர், வையாபுரி, ஐஸ்வர்யா லட்சுமி, சன்யா மல்ஹோத்ரா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.


துல்கர் விலகல்

மலையாள சினிமாவில் ஒரு முக்கிய முன்னணி நடிகராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ள நடிகர் துல்கர் சல்மான் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இவரது கதாபாத்திரம் கமல் ஹாசனின் மகன் காப்பாத்திரமாக இருக்கும் என பலர் மத்தியில் பேசப்பட்டது. இவர் தக் லைஃப் திரைப்படத்தில் இருந்து விலகியுள்ளார். இதற்கான காரணம் சரியான தகவலாக வெளியாகவில்லை.



STR Entry

துல்கர் விலகிய காரணத்தால் இவருக்கு பதில் நடிகர் சிலம்பரசனை நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டது. இறுதியாக துல்கர் சல்மான் நடிகருக்கு பதில் சிலம்பரசன் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். 


இவர் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்க தயாராகி வந்துள்ளார். இதற்காக பல மாதங்கள் எந்த படமும் நடிக்காமல் காத்திருந்த சிலம்பரசன், தற்போது கமல் நடிக்கும் படத்தில் வாய்ப்பு கிடைத்ததும் இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து இப்பட குழுவில் இணைந்துள்ளார். 


சிலம்பரசன் இப்படத்தில் நடிப்பதை குறித்து ப்ரோமோ வீடியோ மூலம் தக் லைஃப் படக்குழு அறிவிப்புகள் வெளியிட்டது. இதனை சிலம்பரசன் ரசிகர்கள் கொண்டாடி சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.


jayam ravi

தக் லைஃப் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜெயம் ரவி இப்படத்தில் இருந்து விலகியுள்ளார் என சமூக வலைத்தளத்தில் செய்திகள் கசிந்து பரவி வருகிறது. சிலம்பரசன் என்ட்ரி வீடியோ பதிவேற்றிய தக் லைஃப் குழு அதில் குறிப்பிட்ட நட்சத்திரங்களின் பெயர்களில் ஜெயம் ரவி பெயர் இடம் பெற வில்லை. இதனால் ஜெயம் ரவி இப்படத்தில் இருந்து விலகியுள்ளார் என சினிமா விமர்சகர்கள் பலர் கூறுகின்றனர்.



silambarasan

நடிகர் ஜெயம் ரவிக்கு சிலம்பரசன் மீது பொறாமையா? அதன் காரணமாக தான் இவர் இப்படத்தில் இருந்து விலகியுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இயக்குனர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பல நட்சத்திர பட்டாளம் நடிக்க உருவானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்ட பிளாக்பஸ்டர் திரைப்படம் ஆகும்.


பொன்னியின் செல்வன் படத்தில் ஏற்பட்ட குழப்பத்தில் இப்படத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்க சில பேச்சு வார்த்தைகள் ஆரம்பமானது. அச்சமயம் ஜெயம் ரவி மற்றும் சில நடிகர்கள் சிலம்பரசன் நடித்தால் இப்படத்தில் இருந்து நாங்கள் விலகிவிடுகிறோம் என கூறியதாக பல செய்திகள் வெளியாகின, ஆனால் பொன்னியின் செல்வன் பட ஆடியோ வெளியீட்டு விலகில் நடிகர் ஜெயம் ரவி இதனை மறுத்து பேசி பொய்யான தகவல் என கூறினார்.


தற்போது சிலம்பரசன் தக் லைஃப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனதால் இப்படத்தில் இருந்து ஜெயம் ரவி விலகியுள்ளார். நடிகர் ஜெயம் ரவி மற்றும் சில முன்னணி நடிகர்களுக்கு சிலம்பரசன் மீது உள்ள பொறாமை மற்றும் போட்டி தான் காரணம் என சமூக வலைத்தள விமர்சகர்கள் பலர் விமர்சத்து வருகின்றனர்.


நாயகன் எஸ் டி ஆர்

சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சில கசப்பான அனுபவத்தால் தவித்து வந்த சிலம்பரசன், சில சமயம் கோலிவுட் தமிழ் சினிமா படங்களில் இருந்து ஓய்வு பெற்று வாழ்ந்து வந்தார். பின்பு தனது இடத்தினை மீண்டும் தான் பிடிக்க வேண்டும் என நினைத்த சிலம்பரசன், தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுத்தார். ஆனால் சில படங்கள் அவருக்கு ஏமாற்றம் தான் தந்தது.


அவர் சந்தித்த தோல்விகளில் இருந்து தன்னை திருத்திக்கொண்டு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ட்ரெண்ட் நாயகனாக கொண்டாடப்பட்ட சிலம்பரசன், ரசிகர்களுக்கு ஏற்ற திரைக்கதையில் நடிக்க தொடங்கி ஒரு டாப் நடிகர்களில் ஒருவராக பிரபலமாகி உள்ளார்.


தமிழ் சினிமாவில் மீண்டும் நாயகனாக ஜொலித்து வரும் சிலம்பரசன் தனது மார்க்கெட்யை பிடிக்க, அதில் பல இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நடிகர்களுக்கு அச்சம் எழுந்துள்ளது. சிலம்பரசன் நடிக்கும் படங்களில் ரசிகர்கள் அவரைத்தான் கொண்டாடுவார்கள், அவருக்கு உள்ள ரசிகர்கள் படைபலம் படங்களை அவரது படமாக மாற்றி விடுவார்கள் என அஞ்சி பல முன்னணி நடிகர்கள் இவருடன் நடிக்க பயந்து ஓடுகின்றனர்.



Disclaimer

The images featured on this page are sourced from publicly available platforms, official press releases, and promotional materials. These images are published strictly for editorial, informational, and news reporting purposes under the principles of fair use.
We do not claim ownership of any images unless explicitly stated. All image copyrights belong to their respective photographers, production houses, or copyright holders.
If you are the rightful owner of any image and believe that its use on this website is unauthorized or objectionable, please contact us ([email protected]) with proper details. We will promptly review and remove the content if required.


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+