X
ഹോം ടോപ് ലിസ്റ്റിങ്ങ്‌

Maharaja OTT: 100 கோடி வசூல் படைத்த 'மகாராஜா' தற்போது நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியானது

Author: Sakthi Harinath | Updated: Friday, July 12, 2024, 05:01 PM [IST]

Maharaja OTT: 100 கோடி வசூல் படைத்த 'மகாராஜா' தற்போது நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியானது - முழு தகவல்கள் இதோ. இந்த பட்டியலில் நடிகர் விஜய் சேதுபதியின் லேட்டஸ்ட் தமிழ் திரைப்படமான 'மகாராஜா' திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு பற்றிய முழு தகவல்கள் உள்ளன. இந்த படம் திரையரங்கில் வெளியாகி 100 கோடிகள் வசூலித்து சாதனை படைத்துள்ளது. தற்போது மகாராஜா திரைப்படம் 2024 ஜூலை 12ல் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகி உள்ளது. - முழு தகவல்கள் இதோ.

Share:
cover image
Video Thumbnail

மகாராஜா - மகாராஜா

மகாராஜா - இயக்குனர் நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தமிழ் திரைப்பட முன்னணி தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் மற்றும் தயாரிப்பாளர் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.


குடும்பங்கள் கண்டு மகிழும் அதிரடி - திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நடராஜன் சுப்ரமணியம், சிங்கம் புலி, அபிராமி, பாரதிராஜா என தமிழ் சினிமா முன்னணி நட்சத்திரங்கள் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.


நடிகர் விஜய் சேதுபதி திரைவாழ்வில் இவர் நடிக்கும் 50வது படமாகும், மகாராஜா. இப்படத்தினை பேஸ்சன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ள நிலையில், இப்படம் 2024 ஜூன் 14ல் உலகமெங்கும் வெளியாகியுள்ளது.


കൂടുതല്‍ കാണാം
Video Thumbnail

மகாராஜா கதை - மகாராஜா கதை

விஜய் சேதுபதி கே.கே நகர் பகுதியில் ஒரு சலூன் கடை நடத்தி வருகிறார். இவர் பள்ளிக்கரணை பகுதியில் தன் மகளுடன் வசித்து வருகிறார். ஒரு நாள் தனது வீட்டில் இருந்த லட்சுமி-யை காணவில்லை என போலீஸ் ஸ்டேஷன்-க்கு புகார் அளிக்க வரும், விஜய் சேதுபதி பல அவமானங்களை சந்தித்து போலிஸிடம் சில லட்சம் லஞ்சம் தருவதாக டீல் செய்து தனது வீட்டில் காணாமல் போன லட்சுமியை கண்டுபிடிக்க சொல்கிறார். விஜய் சேதுபதியின் டீலுக்காக போலீஸ் அதிகாரி நடராஜன் தனது தேடலை தொடங்குகிறார்.


கதைக்களம் நகர பல விஷயங்கள் வெளிவருகிறது. 15 வருடத்திற்கு முன் அனுராக் காஷ்யப் எலக்ட்ரிகல் தொழில் செய்து வருகிறார். பகல் நேரத்தில் எலக்ட்ரிகல், இரவு நேரத்தில் திருட்டு என செய்து வருகிறார் அனுராக் காஷ்யப். தான் கொள்ளையடிக்க செல்லும் இடங்களில் உள்ள பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வருகிறார், அனுராக் காஷ்யப். ஒரு நாள் போலீஸிடம் சிக்கும் அனுராக் காஷ்யப், இதற்கு காரணம் விஜய் சேதுபதி தான், என தவறாக புரிந்து கொள்கிறார். 15 வருடம் ஜெயில் தண்டனைக்கு பிறகு வெளிவரும் அனுராக் காஷ்யப், விஜய் சேதுபதியை தேடி கண்டுபிடித்து அவரை பழிவாங்க துடிக்கிறார். 


விஜய் சேதுபதியின் மனைவி திவ்யா பாரதி ஒரு விபத்தில் சிக்கி உயிரிழக்க, அப்போது அவரது மகளை குப்பை தொட்டியில் போட்டு செல்கின்றனர். விஜய் சேதுபதி தன் மகளுடன் அந்த குப்பை தொட்டியையும் எடுத்து வருகிறார். அந்த குப்பை தொட்டியின் பெயர் தான் லட்சுமி. 


ஜெயிலில் இருந்த வெளிவந்த அனுராக் காஷ்யப், விஜய் சேதுபதியின் மகளை பாலியல் பலாத்காரம் செய்து விடுகிறார். பின்னர் விஜய் சேதுபதி குப்பை தொட்டி காணவில்லை என புகார் அளித்து, போலீஸ் கவனத்தை ஈர்த்து, அனுராக் காஷ்யப் கண்டுபிடிக்கிறார். பின் என்ன நடக்கிறது என்பதே இப்படத்தின் ட்விஸ்ட்...

Video Thumbnail

குரங்கு பொம்மை - குரங்கு பொம்மை

மகாராஜா திரைப்படம் 'மக்கள் செல்வன்' திரைப்பயணத்தில் இவர் நடித்துள்ள 50வது திரைப்படமாகும். இப்படத்தினை 'குரங்கு பொம்மை' திரைப்படத்தினை இயக்கி மக்களின் மனதை வென்ற நித்திலன் சுவாமிநாதன் இயக்கியுள்ளார். குரங்கு பொம்மை படத்திற்கு பின் 7 வருடங்களுக்கு பிறகு நித்திலன் இப்படத்தின் மூலம் தனது இரண்டாவது படைப்பை படைத்துள்ளார்.


കൂടുതല്‍ കാണാം
Video Thumbnail

மகாராஜா பாக்ஸ் ஆபிஸ் - மகாராஜா - பாக்ஸ் ஆபிஸ்

மகாராஜா திரைப்படம் வெளியாகி விமர்சனம் ரீதியாக ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பினை பெற்று கொண்டாடப்பட்டு பிரபலமானது. இப்படத்திற்கு சராசரியாக (3.5/5) ரேட்டிங் ரசிகர்கள் மத்தியில் அளிக்கப்பட்டுள்ளது. பலரின் கவனத்தை கவர்ந்துள்ள இப்படம் இந்திய பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தில் 100 கோடிகளை தாண்டி வசூலித்து சாதனை படைத்துள்ளது. இப்படம் வசூல் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை இப்படத்தின் தயாரிப்பாளர் போஸ்டர் மூலம் அறிவித்துள்ளார். பல ஆண்டுகளுக்கு பின் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள தமிழ் திரைப்படம் இந்த ஆண்டு பெரிய வெற்றியை படைத்து இவரது திரைப்பயண மார்க்கெட்-ஐ மீண்டும் உயர்த்தியுள்ளது.


Video Thumbnail

மகாராஜா ஓடிடி - மகாராஜா - டிஜிட்டல் & ஓடிடி

மகாராஜா திரைப்படத்தின் ஓடிடி ஸ்ட்ரீமிங் டிஜிட்டல் உரிமையை 'நெட்ப்ளிக்ஸ்' நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில், இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை ஸ்டார் விஜய் டிவி நிறுவனம் பெற்றுள்ளது. தற்போது 2024 ஜூலை 12ல் மகாராஜா திரைப்படம் 'நெட்ப்ளிக்ஸ்' ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகியுள்ளது.


திரையரங்கில் இப்படத்தினை கொண்டாடிய ரசிகர்கள் தற்போது ஓடிடி தளத்தில் இப்படத்தினை கொண்டாடி வருகின்றனர்.

Disclaimer

The images featured on this page are sourced from publicly available platforms, official press releases, and promotional materials. These images are published strictly for editorial, informational, and news reporting purposes under the principles of fair use.
We do not claim ownership of any images unless explicitly stated. All image copyrights belong to their respective photographers, production houses, or copyright holders.
If you are the rightful owner of any image and believe that its use on this website is unauthorized or objectionable, please contact us ([email protected]) with proper details. We will promptly review and remove the content if required.


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+