பாண்டியன் ஸ்டோர்ஸ் - விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குடும்ப சீரியல். இந்த சீரியல் 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 5 வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகிவரும் சூப்பர் ஹிட் தமிழ் சீரியல். இந்த சீரியல் தற்போது விறுவிறுப்பான கதைக்களத்தில் நகர்கிறது. இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் TRP ரேட்டிங் இடத்தில் பல சாதனைகள் படைக்கிறது. இதனை பற்றிய முழு விவரங்கள் இதோ.
விஜய் தொலைக்காட்சியில் வாரந்தோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் சூப்பர் ஹிட் தமிழ் சீரியல். இந்த சீரியலை இயக்குனர் சிவா சேகர் மற்றும் டேவிட் சார்லி இணைந்து இயக்குகின்றனர். இந்த சீரியலில் குமரன், ஸ்டாலின் முத்து, சுஜாதா, வெங்கட் என பல பிரபலங்கள் நடிக்கின்றனர். குடும்ப சீரியல் ஆக உருவாகியுள்ள இந்த சீரியல் பல மொழியில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் உடைந்தது: சின்னத்திரையில் வேற லெவல் வரவேற்பு, எகிறும் டி.ஆர்.பி-/top-listing/pandian-stores-family-broken-because-of-kannan-vijay-tv-serial-having-highest-trp-rating-5-2355.html#பாண்டியன்-ஸ்டோர்ஸ்
2
கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் சில சிறிய விரிசல்கள் விள தொடங்கியுள்ளது. ஒரு மாதமாக ஜீவாவின் மனதுக்குள் இருக்கும் வேதனைகள் எப்போது வெடிக்கும் என ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக உள்ளது. மீனாவின் தங்கை திருமணத்திற்காக ஜனார்த்தனன் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை அழைத்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் உடைந்தது: சின்னத்திரையில் வேற லெவல் வரவேற்பு, எகிறும் டி.ஆர்.பி-/top-listing/pandian-stores-family-broken-because-of-kannan-vijay-tv-serial-having-highest-trp-rating-5-2355.html#இதுவரை
3
மீனாவின் தங்கை திருமணத்திற்காக செய்முறை செய்ய மூர்த்தி & தனம் ₹ 50,000 ரூபாயை பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் சார்பில் மொய் வைக்க திட்டமிட்டுள்ளனர். அதே சமயம் கதிர் & முல்லை மாப்பிளை சார்பில் ₹ 5000 மொய் செய்கின்றனர். ஆனால் எந்த சம்மதமும் இல்லாமல் கண்ணன் & ஐஸ்வர்யா ₹ 5000 மொய் வைக்கின்றனர். இதனால் மீனாவின் தங்கை திருமணத்திற்கு ஜீவா & மீனாவின் பங்கு என்ன? என்னும் கேள்வி எழுந்துள்ளது. திருமணத்தில் செய்முறை விஷயத்தில் பிரச்சனைகள் எழுகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் உடைந்தது: சின்னத்திரையில் வேற லெவல் வரவேற்பு, எகிறும் டி.ஆர்.பி-/top-listing/pandian-stores-family-broken-because-of-kannan-vijay-tv-serial-having-highest-trp-rating-5-2355.html#இந்த-வார-ப்ரோமோ
4
தன் அண்ணனுக்கு தெரியாமல் தான் செய்முறை செய்ய வேண்டும் என்னும் எண்ணத்தோடு இருக்கும் கண்ணன், முல்லையின் அம்மாவிடம் இருந்து இரண்டு மொய் கவரை பெற்று அதனையும் தவறுதலாக மோய் செய்கிறார். மூர்த்தி சொன்ன பாண்டியன் ஸ்டோர்ஸ் என்று எழுதாமல் மூர்த்தி & தனம் என மொய் எழுதுகிறார். இதனால் வேறு பிரச்சனைகள் தொடங்குகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் உடைந்தது: சின்னத்திரையில் வேற லெவல் வரவேற்பு, எகிறும் டி.ஆர்.பி-/top-listing/pandian-stores-family-broken-because-of-kannan-vijay-tv-serial-having-highest-trp-rating-5-2355.html#கண்ணன்-செய்த-தவறு
5
கண்ணன் செய்த தவறால் செய்முறை விஷயத்தில் மீனா & ஜீவா தம்பதி அவமானம் அடைகின்றனர். உன் தங்கை திருமணத்திற்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என ஜனார்த்தனன் மீனாவிடம் கேள்வி எழுப்ப மனமுடைகிறார், மீனா. இதனால் மீனா ஆத்திரத்தோடு ஜீவாவிடம் எடுத்துரைக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் உடைந்தது: சின்னத்திரையில் வேற லெவல் வரவேற்பு, எகிறும் டி.ஆர்.பி-/top-listing/pandian-stores-family-broken-because-of-kannan-vijay-tv-serial-having-highest-trp-rating-5-2355.html#ஆத்திரத்தில்-ஜீவா-and-மீனா
6
மொய் விஷயத்தில் தான் அவமானம் அடைந்த நிலையை பற்றி மூர்த்தியிடம் ஜீவா கேள்வி எழுப்புகிறார். ஜீவாவுக்கு ஆதரவாக ஜனார்த்தனன் நிற்க, சண்டை பெரிதாகிறது. இனி உங்களோடு நான் இருக்கமாட்டேன் என ஜீவா வெளிப்படையாக கூறுகிறார். மறுபுறம் கண்ணனை மூர்த்தி அடித்துவிட கண்ணனுக்கு ஆதரவாக ஐஸ்வர்யா சண்டை போட தொடங்குகிறார். ஐஸ்வர்யா மற்றும் ஜீவா இருவரும் மூர்த்தியின் குடும்பத்தில் இருந்து பிரிகின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் உடைந்தது: சின்னத்திரையில் வேற லெவல் வரவேற்பு, எகிறும் டி.ஆர்.பி-/top-listing/pandian-stores-family-broken-because-of-kannan-vijay-tv-serial-having-highest-trp-rating-5-2355.html#மூர்த்தியிடம்-மல்லுக்கு-நிற்கும்-ஜீவா
7
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் உடைகிறது. இந்த சீரியல் தற்போது விறுவிறுப்பான கதைக்களத்தை அடைந்துள்ளது. இந்த சூழலில் மக்கள் மத்தியில் இந்த சீரியல் பெரிய அளவில் பேசப்பட்டு டி.ஆர்.பி (TRP)யில் சாதனை படைத்துள்ளது. இந்த வாரத்தின் அதிக டி.ஆர்.பி (TRP) பெற்ற தொலைக்காட்சி சீரியலில் இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முன்னிலை இடம் வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் உடைந்தது: சின்னத்திரையில் வேற லெவல் வரவேற்பு, எகிறும் டி.ஆர்.பி-/top-listing/pandian-stores-family-broken-because-of-kannan-vijay-tv-serial-having-highest-trp-rating-5-2355.html#டி-ஆர்-பி-trp-சாதனை
Disclaimer
The images featured on this page are sourced from publicly available platforms, official press releases, and promotional materials. These images are published strictly for editorial, informational, and news reporting purposes under the principles of fair use.
We do not claim ownership of any images unless explicitly stated. All image copyrights belong to their respective photographers, production houses, or copyright holders.
If you are the rightful owner of any image and believe that its use on this website is unauthorized or objectionable, please contact us ([email protected]) with proper details. We will promptly review and remove the content if required.