X
ഹോം ടോപ് ലിസ്റ്റിങ്ങ്‌

இந்த வார (2023, டிசம்பர் 22) தமிழ் ஓடிடி ஸ்ட்ரீமிங் & தியேட்டர் ரிலீஸ் படங்களின் முழு லிஸ்ட்

Author: Sakthi Harinath | Published: Friday, December 22, 2023, 01:02 PM [IST]

இந்த வார (2023, டிசம்பர் 15) தமிழ் ஓடிடி ஸ்ட்ரீமிங் & தியேட்டர் ரிலீஸ் படங்களின் முழு லிஸ்ட் இங்கு உள்ளன. இந்த பட்டியலில் இந்த வாரம் டிசம்பர் 22, 2023 தமிழ் சினிமாவில் தியேட்டர் ரிலீஸ் மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் திரைப்படங்களான சலார், 80ஸ் பில்டப், சபா நாயகன், அரணம், அக்வாமேன் என பல திரைப்படங்கள் உள்ளன. முழு தகவல்கள் இதோ.

Share:
cover image
Video Thumbnail

சபா நாயகன் - சபா நாயகன்

சபா நாயகன் - இயக்குனர் சி எஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன், மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன், சாந்தினி சௌத்திரி என பல பிரபலங்கள் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.

Video Thumbnail

சலார் - சலார்

சலார் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் அதிரடி திரைப்படம். இப்படத்தினை கே.ஜி.எஃப் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகண்டுர் இப்படத்தினை தயாரிக்கிறார். இத்திரைப்படம் ஒரு பேன் இந்திய திரைப்படமாக தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழியில் உருவாகியுள்ளது.

Video Thumbnail

அக்வாமேன் அண்ட் தி லாஸ்ட் கிங்டம் - அக்வாமேன் அண்ட் தி லாஸ்ட் கிங்டம்

அக்வாமேன் அண்ட் தி லாஸ்ட் கிங்டம் (Aquaman and the Lost Kingdom): இயக்குனர் ஜேம்ஸ் வான் இயக்கத்தில் ஜேசன் மோமோவா, அம்பர் கேர்ட், பாட்ரிக் வில்சன் என பல ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடித்திருக்கும் அதிரடி திரைப்படம். இப்படத்தினை டிசி (DC) காமிக்ஸ் புத்தகத்தின் கதை அடைப்படையில் உருவாக்கியுள்ளனர், படக்குழுவினர். 

 அக்வாமேன் 2 திரைப்படத்தினை பீட்டர் சப்ரன் & ஜேம்ஸ் வான் இணைந்து டிசி பிலிம்ஸ் - சஃப்ரான் கம்பெனி - அட்டாமிக் மான்ஸ்டர் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள் மூலம் தயரித்து, இப்படத்தினை உலகம் முழுவதும் வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் விநியோகம் செய்துள்ளனர்.

Video Thumbnail

ஜிகிரி தோஸ்த் - ஜிகிரி தோஸ்த்

ஜிகிரி தோஸ்த் - இயக்குனர் அறன் வி இயக்கத்தில் ஷாரிக், அம்மு அபிராமி, அறன் வி, பவித்ரா லட்சுமி என பல நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அஸ்வின் விநாயக மூர்த்தி இசையமைத்துள்ளார்.


Video Thumbnail

அரணம் - அரணம்

அரணம் - திரு. பிரியன் தானே இயக்குனராகவும், நடிகராகவும் பணியாற்றியுள்ள திரைப்படம். இப்படத்தில் வர்ஷா சரவணகுமார், கீர்த்தனா கண்ணதாசன் என பலர் நடித்துள்ளனர். இப்படத்தினை தயாரிப்பாளர் தமிழ் திரைக்கூடம் தயாரிக்க, இசையமைப்பாளர் சாஜன் மாதவ் இசையமைத்துள்ளார்.

Video Thumbnail

ஆயிரம் பொற்காசுகள் - ஆயிரம் பொற்காசுகள்

ஆயிரம் பொற்காசுகள் இயக்குனர் ரவி முருகையா இயக்கத்தில் விதார்த், அருந்ததி நாயர் நடிக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜோகன் இசையமைத்துள்ளார்.

Video Thumbnail

80ஸ் பில்டப் - 80ஸ் பில்டப் | அமேசான்

80ஸ் பில்டப் (80's Buildup) - இயக்குனர் எஸ் கல்யாண் இயக்கத்தில் சந்தானம், ராதிகா பிரீத்தி, மன்சூர் அலி கான், கே எஸ் ரவிக்குமார் என பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள  நகைச்சுவை திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல் ராஜா தனது 'ஸ்டூடியோ கிரீன்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 

நகைச்சுவையான திரைக்கதையில் தமிழ் திரைப்பட ரசிகர்கள் குடும்பங்களோடு ரசிக்கும் வண்ணத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஒளிப்பதிவாளர் ஜகோப் ரத்தினராஜ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பாரதி எம் எஸ் எடிட்டிங் செய்துள்ளார்.

Video Thumbnail

குய்கோ - குய்கோ | நெட்ப்ளிக்ஸ்

குய்கோ - இயக்குனர் டி அருள் செழியன் இயக்கத்தில் விதார்த், யோகிபாபு, இளவரசு, வினோதினி வைத்தியநாதன் என பலர் நடித்திருக்கும் நகைச்சுவை & காதல் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அந்தோனி தாசன் இசையமைத்துள்ளார்.


Video Thumbnail

கோஸ்ட் - கோஸ்ட் | ஆஹா தமிழ்

கோஸ்ட் - இயக்குனர் எம் ஜி ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் ஷிவராஜ்குமார், ஜெயராம், அர்ச்சனா என பல பிரபலங்கள் நடித்திருக்கும் அதிரடி திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் சந்தேஷ் நாகராஜ் தயாரிக்க, இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ளார்.

Disclaimer

The images featured on this page are sourced from publicly available platforms, official press releases, and promotional materials. These images are published strictly for editorial, informational, and news reporting purposes under the principles of fair use.
We do not claim ownership of any images unless explicitly stated. All image copyrights belong to their respective photographers, production houses, or copyright holders.
If you are the rightful owner of any image and believe that its use on this website is unauthorized or objectionable, please contact us ([email protected]) with proper details. We will promptly review and remove the content if required.


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+