X
ഹോം ടോപ് ലിസ്റ്റിങ്ങ്‌

6 நாட்களில் 400 கோடி வசூல் சாதனை... சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்-ன் ஜெயிலர் படைத்த ரெகார்ட்

Author: Sakthi Harinath | Published: Wednesday, August 16, 2023, 12:53 PM [IST]

6 நாட்களில் 400 கோடி வசூல் சாதனை... சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்-ன் ஜெயிலர் படைத்த ரெகார்ட் பற்றிய முழு விவரங்கள் இங்கு உள்ளன. இந்த பட்டியலில் சமீபத்தில் வெளியான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் வசூல் ரீதியாக உலகளவில் படைத்து வரும் சாதனைகள் பற்றி முழு விவரங்கள் உள்ளது. முதல் நாள் கலெக்ஷன்ஸ் முதல் 6 முடிவில் இப்படம் வசூல் செய்துள்ள கோடி மற்றும் உலகளவில் வெளியாகி ஜெயிலர் படைத்துள்ள சாதனைகள் பற்றி முழு விவரங்கள் இங்கு உள்ளன. முழு தகவல்கள் இதோ.

Share:
cover image
Jailer

ஜெயிலர் - சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருக்கும் 169வது ரஜினியின் திரைப்படம், இப்படம் 'தலைவர் 169' என அறிவித்து பின் ஜெயிலர் என்ற தலைப்பினை வெளியிட்டனர், படக்குழுவினர். ஜெயிலர் திரைப்படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, மிர்னா, ரித்விக், யோகி பாபு என பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வரவேற்பு பெற்று கொண்டாடப்படும் தமிழ் படமாக இப்படம் தற்போது பிரபலமாகியுள்ளது.

കൂടുതല്‍ കാണാം


வரவேற்பு

ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு காலத்தில் பெரிய அளவில் இப்படம் பேசப்படவில்லை என்றாலும், இப்படத்தின் முதல் சிங்கிள் 'காவாலா' மற்றும் இரண்டாம் சிங்கிள் பாடலான 'ஹும்கும்' பாடல் வெளியாகி தமிழ் திரைரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ட்ரெண்ட் ஆனது. இப்படத்தின் பாடல்களை தொடர்ந்து ஜெயிலர் திரைப்படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ லான்ச் நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு இணையதள சமூக வலைத்தளத்தில் பெரிய அளவில் ட்ரெண்ட் ஆனது.

கொண்டாடிய ரசிகர்கள்

2023, ஆகஸ்ட் 10ல் உலகமெங்கும் திரையரங்கில் வெளியான ஜெயிலர் திரைப்படம் தமிழகம், கர்நாடக, தெலுங்கானா, ஆந்திர பிரதேஷ், கேரளா மற்றும் பல மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பில் கொண்டாடப்பட்ட திரைப்படமாகும். திரைக்கதை, காட்சிகள், கதாபாத்திர வடிவமைப்பு என பல விஷயங்களில் ஜெயிலர் திரைப்படம் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.


முதல் நாள் கலெக்ஷன்

ஜெயிலர் திரைப்படம் வெளியாகி உலகளவில் இப்படம் படைத்த முதல் நாள் கலெக்ஷன் ரிப்போர்ட் பின் அடுத்தடுத்த நாளில் இப்படம் வசூல் ரீதியாக படைத்துள்ள சாதனைகள் இங்கு உள்ளன. முதல் நாளில் மட்டும் ஜெயிலர் திரைப்படம் உலகளவில் 97 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்த கலெக்ஷன் தமிழ் சினிமா படங்களில் எந்த திரைப்படமும் இதுவரை வசூல் செய்யாத மிகப்பெரிய வசூல் திரைப்படமாகும்.

300 கோடி வசூல் சாதனை

இப்படம் வெளியாகி முதல் 4 நாட்களில் வியாழன் முதல் ஞாயிறு வரையிலான விடுமுறை நாட்களில் இப்படம், 300 கோடிகள் வசூலித்து தமிழ் சினிமாவில் சாதனை படைத்துள்ளது. 4 நாட்களில் 300 கோடிகள் என்பது இமலாய வசூல் சாதனை படைப்பாகும். ரசிகர்களுக்கு இப்படத்தின் மேல் உள்ள அதீத வரவேற்பு மற்றும் எதிர்பார்ப்புகள் தான் இந்த சாதனைகளுக்கு காரணம் என பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.


400 கோடி வசூல்

2.0, கபாலி, விக்ரம் மற்றும் பொன்னியின் செல்வன் 01 திரைப்படத்திற்கு பின் 400 கோடி வசூலில் செய்துள்ள படங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது, ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர். இப்படத்தின் மூலம் ரஜினி நடித்துள்ள 3 படங்கள் 400 கோடிகள் வசூல் கடந்து இமாலய சாதனை படைத்திருக்கிறது. ஜெயிலர் திரைப்படம் வெளியாகி 6 நாட்களில் 400 கோடி வசூலித்து பிரமாண்ட சாதனை படைத்திருக்கிறது.

Disclaimer

The images featured on this page are sourced from publicly available platforms, official press releases, and promotional materials. These images are published strictly for editorial, informational, and news reporting purposes under the principles of fair use.
We do not claim ownership of any images unless explicitly stated. All image copyrights belong to their respective photographers, production houses, or copyright holders.
If you are the rightful owner of any image and believe that its use on this website is unauthorized or objectionable, please contact us ([email protected]) with proper details. We will promptly review and remove the content if required.


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+