2023 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் உருவாகும் பார்ட் 2 திரைப்படங்களின் லிஸ்ட் மற்றும் தகவல்கள் இங்கு உள்ளன. இந்த பட்டியலும் இந்தியன் 2, ஆயிரத்தில் ஒருவன் 2, வடசென்னை 2 என தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பில் உள்ள திரைப்படங்களின் பட்டியல் மட்டுமே இங்கு உள்ளன. முழு விவரங்கள் இதோ.
வடசென்னை 02 - தமிழ் சினிமாவில் 2018 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம். இப்படத்தில் தனுஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இப்படம் தமிழ் திரைரசிகர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள திரைப்படம். இன்றும் தமிழ் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் பார்ட் 02 படங்களில் முக்கிய திரைப்படமாகும், வடசென்னை 2.
2023: தமிழ் சினிமாவை வேற லெவலிற்கு எடுத்து செல்லவிருக்கும் பார்ட் 2 படங்களின் லிஸ்ட்-வட சென்னை/top-listing/2023-upcoming-part-2-tamil-movies-list-which-highly-anticipated-in-kollywood-film-industry-5-2397.html#vada-chennai
2
இயக்குனர் பி வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான சந்திரமுகி திரைப்படம் தமிழ் சினிமாவில் பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தின் தொடர்ச்சியாக சந்திரமுகி 02 படத்தினை இயக்குனர் வாசு இயக்க, நடிகர் ராகவா லாரென்ஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் முதல் பாகத்தின் தொடர்ச்சி கதையில் உருவாகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஹிந்தி நடிகை கங்கனா முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.
2023: தமிழ் சினிமாவை வேற லெவலிற்கு எடுத்து செல்லவிருக்கும் பார்ட் 2 படங்களின் லிஸ்ட்-சந்திரமுகி 2/top-listing/2023-upcoming-part-2-tamil-movies-list-which-highly-anticipated-in-kollywood-film-industry-5-2397.html#chandramukhi-2
3
2022ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் ஒரு வரலாற்று படமாக வெளியாகி பெரிய அளவில் கொண்டாடப்பட்ட தமிழ் திரைப்படம், பொன்னியின் செல்வன். இப்படம் உலகளவில் 500 கோடிகள் வசூலித்து சாதனை படைத்துள்ளது. முதல் பாகத்தின் இமாலய வெற்றிக்கு பின், பொன்னியின் செல்வன் 02 திரைப்படம் 2023 ஏப்ரல் 28ல் உலகமெங்கும் வெளியாகிறது. இப்படத்திற்கு தமிழ் திரைரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
2023: தமிழ் சினிமாவை வேற லெவலிற்கு எடுத்து செல்லவிருக்கும் பார்ட் 2 படங்களின் லிஸ்ட்-பொன்னியின் செல்வன் 2/top-listing/2023-upcoming-part-2-tamil-movies-list-which-highly-anticipated-in-kollywood-film-industry-5-2397.html#ponniyin-selvan-2
4
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி - ரீமா சென் - ஆண்ட்ரியா என முன்னணி பிரபலங்கள் நடித்திருக்கும் திரைப்படம், ஆயிரத்தில் ஒருவன். இப்படம் தமிழ் திரை ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கொண்டாடப்பட்டுள்ளது. தற்போது ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. இதனை பற்றிய படக்குழு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆயிரத்தில் ஒருவன் 02 திரைப்படத்தில் நடிகர் கார்த்தியுடன் இணைந்து தனுஷ் நாயகனாக நடிக்கிறார்.
2023: தமிழ் சினிமாவை வேற லெவலிற்கு எடுத்து செல்லவிருக்கும் பார்ட் 2 படங்களின் லிஸ்ட்-ஆயிரத்தில் ஒருவன் 2/top-listing/2023-upcoming-part-2-tamil-movies-list-which-highly-anticipated-in-kollywood-film-industry-5-2397.html#aayirathil-oruvan-2
5
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜனரஞ்சகமான திரைப்படம், இந்தியன் 02. இப்படம் தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது. விரைவில் இந்தியன் 02 திரைப்படம் 2023 ஆம் ஆண்டு இறுதி அல்லது 2024 பொங்கல் பண்டிகைக்கு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியன் 2 திரைப்படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த் என பல தமிழ் திரை பிரபலங்கள் நடித்துள்ளனர்
2023: தமிழ் சினிமாவை வேற லெவலிற்கு எடுத்து செல்லவிருக்கும் பார்ட் 2 படங்களின் லிஸ்ட்-இந்தியன் 2/top-listing/2023-upcoming-part-2-tamil-movies-list-which-highly-anticipated-in-kollywood-film-industry-5-2397.html#indian-2
6
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெளியாகி தமிழ் சினிமாவில் பட்டைய கிளப்பிய அதிரடி - திரில்லர் திரைப்படம், கைதி. இப்படம் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வெற்றி வாகை சூடி கொண்டாடப்படுகிறது. தற்போது இயக்குனர் லோகேஷ் விஜய்யின் 'லியோ' படத்தினை இயக்கி வருகிறார். இப்படம் முடிவடைந்ததும் 'கைதி 02' திரைப்படம் உருவாகும் என படத்தின் இயக்குனர் லோகேஷ் கூறியுள்ளார்.
2023: தமிழ் சினிமாவை வேற லெவலிற்கு எடுத்து செல்லவிருக்கும் பார்ட் 2 படங்களின் லிஸ்ட்-கைதி/top-listing/2023-upcoming-part-2-tamil-movies-list-which-highly-anticipated-in-kollywood-film-industry-5-2397.html#kaithi
7
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா விஜயன், கலையரசன், பசுபதி என பல பிரபலங்கள் நடித்திருக்கும் அதிரடி திரைப்படம், சர்பட்டா பரம்பரை. இப்படம் நேரடியாக அமேசான் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆனது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சர்பட்டா 02 படத்திலும் பா ரஞ்சித் - ஆர்யா கூட்டணி அமைந்துள்ளது. இப்படம் முதல் பாகத்தின் தொடர்ச்சி கதையா இல்லையா என எவ்வீத தகவலும் இன்னும் வெளியாகவில்லை.
2023: தமிழ் சினிமாவை வேற லெவலிற்கு எடுத்து செல்லவிருக்கும் பார்ட் 2 படங்களின் லிஸ்ட்-சார்பட்டா 2/top-listing/2023-upcoming-part-2-tamil-movies-list-which-highly-anticipated-in-kollywood-film-industry-5-2397.html#sarpatta-2
8
தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் உருவான சூப்பர் ஹிட் திரைப்படம், புதுப்பேட்டை. இப்படத்தினை இன்றும் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில் இயக்குனர் செல்வராகவன் 'புதுப்பேட்டை 02' திரைப்படம் உருவாக தயாராகி வருகிறது என தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்து புதுப்பேட்டை 2 பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
2023: தமிழ் சினிமாவை வேற லெவலிற்கு எடுத்து செல்லவிருக்கும் பார்ட் 2 படங்களின் லிஸ்ட்-புதுப்பேட்டை/top-listing/2023-upcoming-part-2-tamil-movies-list-which-highly-anticipated-in-kollywood-film-industry-5-2397.html#pudhupettai
9
விடுதலை - இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி & சூரி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜனரஞ்சகமான திரில்லர் & அதிரடி திரைப்படம். விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் 2023 மார்ச் 31ல் வெளியானதை தொடர்ந்து, விடுதலை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 2023 செப்டம்பர் மாதம் வெளியாகிறது.
2023: தமிழ் சினிமாவை வேற லெவலிற்கு எடுத்து செல்லவிருக்கும் பார்ட் 2 படங்களின் லிஸ்ட்-விடுதலை/top-listing/2023-upcoming-part-2-tamil-movies-list-which-highly-anticipated-in-kollywood-film-industry-5-2397.html#viduthalai
Disclaimer
The images featured on this page are sourced from publicly available platforms, official press releases, and promotional materials. These images are published strictly for editorial, informational, and news reporting purposes under the principles of fair use.
We do not claim ownership of any images unless explicitly stated. All image copyrights belong to their respective photographers, production houses, or copyright holders.
If you are the rightful owner of any image and believe that its use on this website is unauthorized or objectionable, please contact us ([email protected]) with proper details. We will promptly review and remove the content if required.