X
ഹോം ടോപ് ലിസ്റ്റിങ്ങ്‌

Lal Salaam OTT: 6 மாதம் கிடப்பில் இருந்த 'லால் சலாம்' தற்போது ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

Author: Sakthi Harinath | Published: Tuesday, August 27, 2024, 03:37 PM [IST]

Lal Salaam OTT: 6 மாதம் கிடப்பில் இருந்த 'லால் சலாம்' தற்போது ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு - முழு தகவல்கள் இதோ. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் பிப் 2024ல் வெளியான 'லால் சலாம்' திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாக தயாராகி வருகிறது. இப்படத்தின் ஓடிடி வெளியீடு பற்றிய அறிவிப்புகள் இணையத்தில் வெளியாகி வைரல். முழு தகவல்கள் இதோ.

Share:
cover image
Video Thumbnail

லால் சலாம் - லால் சலாம்

லால் சலாம் - இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த், விக்ராந்த், விஷ்ணு விஷால், நிரோஷா என பல முன்னணி தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை கிரிக்கெட் விளையாட்டை சார்ந்த திரைக்கதையில் வடிவமைத்து இயக்கியுள்ளார், இயக்குனர். லால் சலாம் படத்தினை தமிழ் திரைப்பட முன்னணி தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தனது 'லைக்கா புரொடக்ஷன்ஸ்' நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.


சமூக கருத்துகள் உள்ளடக்கிய ஒரு ஜனரஞ்சகமான படமாக லால் சலாம் படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிராவின் பாஸ்கர் எடிட்டிங் செய்துள்ளார்.


കൂടുതല്‍ കാണാം
Video Thumbnail

லால் சலாம் - லால் சலாம் - கதை

கிரிக்கெட், மதம், அரசியல், ஊரில் நடக்கும் தேர் திருவிழா, ஊருக்குள் நடக்கும் மதக்கலவரம், அதன் மூலம் நடத்தப்படும் மதநல்லிணக்க பாடம் என இந்த கதையை உருவாக்கி இருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இடையே சிறுவயதில் இருந்தே மோதல்கள் இருந்து வருகிறது. இஸ்லாமியரான விக்ராந்த் மீது இந்து மதத்தை சேர்ந்த விஷ்ணு விஷால் கோபம் கொள்வது போன்ற காட்சிகள் குறியீடாக வைக்கப்பட்டது போலவே திரைக்கதை அமைந்துள்ளது.


ஊரில் உள்ள 3ஸ்டார் அணி கிரிக்கெட் டீமில் விளையாடி வெற்றிப் பெற்று வரும் விஷ்ணு விஷால் இன்னொரு டீமில் சேர்ந்து விடுகிறார். அதன் பின்னர் அந்த டீம் தான் வெற்றி பெறுகிறது. 3ஸ்டார் அணியை வெற்றி பெற வைக்க விக்ராந்தை அந்த அணியில் சேர்க்கின்றனர். சிறு வயதில் இருந்தே விஷ்ணு விஷாலுக்கும் விக்ராந்துக்கும் ஆகாத நிலையில், விக்ராந்த் தனக்கு எதிராக ஆடுவது விஷ்ணு விஷலுக்கு பிடிக்கவில்லை. இவர்களுக்குள் நடக்கும் சண்டையை சிலர் பயன்படுத்தி பிரச்சனையை பெரிதுபடுத்த முயலும் போது, தனது மகனுக்கு எதிராக விஷ்ணு விஷால் ஏன் இப்படி நடந்துக் கொள்கிறார் அதே பிரச்சனையுடன் ஊர் மக்கள் ஏன் சண்டை போடுகின்றனர். இது தப்பாச்சே என மொய்தீன் பாய் பாடம் நடத்துவது தான் இந்த படத்தின் கதை.


കൂടുതല്‍ കാണാം
Video Thumbnail

விமர்சனம் ரேட்டிங் - விமர்சனம் & ரேட்டிங்

லால் சலாம் திரைப்படம் விமர்சனம் ரீதியில் மிகப்பெரிய சொதப்பல் படமாக அமைந்துள்ளது. பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் வசூல் ரீதியாக பல சாதனைகள் படைக்கும் என பல விமர்சகர்கள் மத்தியில் பேசப்பட்ட நிலையில், இப்படம் வெளியாகி ஒரு சில நாட்களில் மோசமான விமர்சனம் பெற்று, வசூல் மற்றும் விமர்சனம் ரீதியில் தோல்வி அடைந்துள்ளது. இப்படத்திற்கு 2/5 ரேட்டிங் ரசிகர்கள் மத்தியில் அளிக்கப்பட்டுள்ளது.


Video Thumbnail

லால் சலாம் - லால் சலாம் - பிளாப்

ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், செந்தில் என பல பிரபலங்கள் நடிப்பில் உருவாகியுள்ள 'லால் சலாம்' திரைப்படம் மிக பெரிய எதிர்பார்ப்பில் திரையரங்கில் வெளியானது. சமரசம் மற்றும் சமூக கருத்துகள் நிறைந்த படமாக இப்படம் உருவாகியுள்ளது என பல இப்படத்திற்கு பில்டப் அளித்து எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளனர். இப்படத்தில் ரஜினிகாந்த் இரு முஸ்லிம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரஜினியின் திரைப்பயணத்தில் முஸ்லீம் கதாபாத்திரத்தில் இதுவே முதல் படமாகும்.


விமர்சனம் ரீதியில் இப்படம் பெரிய அளவில் பேசப்படவில்லை, வசூல் ரீதியாக இப்படம் 36 கோடிகள் மட்டுமே வசூலித்துள்ளது. தமிழக பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தில் இப்படம் மிகப்பெரிய தோல்வி திரைப்படமாகும்.


കൂടുതല്‍ കാണാം

Video Thumbnail

லால் சலாம் - லால் சலாம் - ஓடிடி

2024 ஆம் ஆண்டு பிப் மாதம் வெளியான 'லால் சலாம்' திரைப்படம் திரையரங்கில் வசூல் இல்லாமல், விமர்சனம் ரீதியில் குறைவான ரேட்டிங் பெற்று 2024 ஆம் ஆண்டின் தோல்வி பட பட்டியலில் சேர்ந்தது. பின் இப்படத்தின் ஓடிடி வெளியீடு உரிமையை கைப்பற்றியுள்ள நெட்ப்ளிக்ஸ் நிறுவனம், 'லால் சலாம்' படத்தின் காட்சிகள் உள்ள ஒரு ஹார்ட் டிஸ்க் காணாமல் போய்விட்டது என இப்படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்த பேட்டியை பார்த்து, அந்த ஹார்ட் டிஸ்க் இல்லாமல் என்னால் படத்தினை ஓடிடி வெளியிட முடியாது என்று இப்படத்தினை வெளியிடாமல் வந்தது.


தற்போது 2024 ஆகஸ்ட் 27ல் 'லால் சலாம்' படம் தற்போது 'சன் நெக்ஸ்ட்' ஓடிடி தளத்தில் 2024 செப்டம்பர் 20ல் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது என தகவல்கள் மற்றும் படத்தின் ஓடிட்டி வெளியீடு போஸ்டர்கள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகியுள்ளது. லால் சலாம் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு பற்றிய எந்த அறிவிப்பும் அதிகாரபூர்வமாக படக்குழு மற்றும் ஓடிடி தளம் பக்கங்களில் இன்னும் அறிவிக்கப்படவில்லை.


കൂടുതല്‍ കാണാം

Disclaimer

The images featured on this page are sourced from publicly available platforms, official press releases, and promotional materials. These images are published strictly for editorial, informational, and news reporting purposes under the principles of fair use.
We do not claim ownership of any images unless explicitly stated. All image copyrights belong to their respective photographers, production houses, or copyright holders.
If you are the rightful owner of any image and believe that its use on this website is unauthorized or objectionable, please contact us ([email protected]) with proper details. We will promptly review and remove the content if required.


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+