X
ഹോം ടോപ് ലിസ്റ്റിങ്ങ്‌

அஜித் குமார், விஜய் போன்ற முன்னணி தமிழ் நடிகர்களின் முதல் 100 கோடி வசூல் படங்களின் பட்டியல்

Author: Sakthi Harinath | Published: Monday, May 8, 2023, 04:36 PM [IST]

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக பணியாற்றி வரும் ரஜினிகாந்த், விஜய், அஜித் குமார், கமல் ஹாசன் போன்ற பல முக்கிய நட்சத்திரங்களின் முதல் 100 கோடி வசூல் செய்துள்ள படங்கள் பற்றிய தகவல்கள் இங்கு உள்ளன. இந்த பட்டியலும் விஜயின் கத்தி, அஜித் குமாரின் மங்காத்தா, சூர்யாவின் சிங்கம் 2 என பல திரைப்படங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. முழு விவரங்கள் இதோ.

Share:
cover image
Video Thumbnail

ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவில் இன்று வரை பல கோடி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படும் நடிகர், ரஜினிகாந்த். 25 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இவர் ஜொலித்து வருகிறார். தற்போது தமிழ் சினிமாவில் வெளியாகும் பல திரைப்படங்கள் 100 கோடிகள் கடந்து வசூல் மழை பொழிகிறது. 2007ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சிவாஜி திரைப்படம் 100 கோடிகள் வசூல் கடந்து தமிழ் சினிமாவில் பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது. சிவாஜி திரைப்படமே ரஜினியின் திரைவாழ்வில் 100 கோடிகள் வசூல் அள்ளிய முதல் திரைப்படமாகும்.

കൂടുതല്‍ കാണാം
Video Thumbnail

அஜித் குமார்

அஜித்குமார் - தமிழ் திரையுலகில் பல கோடி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படும் நடிகர் ஆவார். இவர் 1992ஆம் ஆண்டு தமிழ் படத்தில் நாயகனாக நடித்து அறிமுகமாகியுள்ளார். பல திரைப்படங்களுக்கு பின் தமிழ் சினிமாவில் இவர் நடிக்கும் அஜித்குமாரின் 50வது படமான 'மங்காத்தா' திரைப்படத்தின் மூலம் இவர் 100 கோடிகள் வசூல் பெற்ற இரண்டாவது ஹீரோ என்னும் புகழினை பெற்றுள்ளார்.

കൂടുതല്‍ കാണാം
Video Thumbnail

விஜய்

விஜய் - தளபதி விஜய் என்று பல ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படும் நடிகர். இவர் தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற இயக்குனர் எஸ் வி சந்திரசேகரின் மகன் ஆவார். 2012 ஆம் ஆண்டு வெளியான துப்பாக்கி திரைப்படத்தின் மூலம் இவர் 100 கோடிகள் வசூல் கடந்து புகழ் பெற்றுள்ளார். தற்போது தமிழ் சினிமாவில் இவரது திரைப்படங்கள் 250 கோடிகளை கடந்து கொண்டாடப்பட்டு வருகிறது.

കൂടുതല്‍ കാണാം
Video Thumbnail

கமல் ஹாசன்

கமல்ஹாசன் - பல நடிகர்களுக்கு நடிப்பின் முன்னோடியாக வாழ்ந்து வருபவர். இவருக்கு தமிழ் சினிமாவில் உலகநாயகன் என்னும் புனைபெயர் உண்டு. பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ள இவர் 2022 ஆம் ஆண்டு விக்ரம் திரைப்படத்தின் மூலம் 100 கோடிகள் வசூல் கடந்து புகழ்பெற்றுள்ளார். விக்ரம் திரைப்படம் 400 கோடிகள் வரை வசூல் செய்துள்ளது.

കൂടുതല്‍ കാണാം

Video Thumbnail

சூர்யா சிவகுமார்

சூர்யா சிவகுமார் - தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படும் நடிகர். இவருக்கு நடிப்பின் நாயகன் என்னும் புனைப்பெயர் உண்டு. இவரது நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியான சிங்கம் 2 திரைப்படம் தமிழ் சினிமாவில் 100 கோடிகள் வசூலை கடந்து பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது. இப்படம் ஹரி - சூர்யா கூட்டணியில் உருவான சிங்கம் படத்தின் தொடர்ச்சியாக உருவாகி வெளியாகியுள்ளது.

കൂടുതല്‍ കാണാം
Video Thumbnail

தனுஷ்

தனுஷ் - தமிழ் சினிமாவின் முன்னணி முக்கிய நடிகர் ஆவார். நடிப்பை தொடர்ந்து தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டு திரைத்துறையில் பணியாற்றிவரும் பிரபலம் ஆவார், தனுஷ். 2019 ஆம் ஆண்டு தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான 'அசுரன்' திரைப்படம் 100 கோடி வசூல் கடந்து வெற்றிபெற்றுள்ளது. இதுவே 100 கோடி வசூல் கடந்த இவரது முதல் திரைப்படமாகும்.

കൂടുതല്‍ കാണാം
Video Thumbnail

சிலம்பரசன்

சிலம்பரசன் - குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி நடிகர், பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர் என பல துறைகளில் பணியாற்றி வரும் நட்சத்திரம். இவரது நடிப்பில் பல திரைப்படங்கள் உருவாகியுள்ளன. இவர் நடித்த செக்க சிவந்த வானம் திரைப்படம் 100 கோடிகள் வசூல் கடந்து பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது. ஆனால் செக்க சிவந்த வானம் திரைப்படத்தில் பல நடிகர்கள் நடித்துள்ளனர். சிலம்பரசன் நடிப்பில் 2022 ஆம் ஆண்டு வெளியான மாநாடு திரைப்படம் 100 கோடிகள் வசூல் கடந்து இமாலய வெற்றி கண்டுள்ளது. சிலம்பரசனின் முன்னணி நடிப்பில் வெளியாகி 100 கோடி வசூல் அள்ளிய திரைப்படம், மாநாடு.

കൂടുതല്‍ കാണാം
Video Thumbnail

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் - தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் அறிமுகமாகி தற்போது ஒரு முன்னணி நடிகராக வளர்ந்துள்ள நட்சத்திரம். திரைத்துறையில் பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பல துறைகளில் பணியாற்றி வரும் பிரபலம் ஆவார், சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளியான டாக்டர் திரைப்படம் 100 கோடிகள் வசூல் அள்ளி இமாலய வெற்றி கண்டுள்ளது. இப்படத்திற்கு பின் இவர் நடித்த டான் திரைப்படமும் 100 கோடிகள் வசூல் அள்ளியுள்ளது.

കൂടുതല്‍ കാണാം

Video Thumbnail

விக்ரம்

விக்ரம் - சீயான் விக்ரம் என தமிழ் திரைத்துறையில் அறியப்படும் இவர் 1990 காலகட்டங்களில் இருந்து தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். பல திரைப்படங்களில் நடித்துள்ள இவர் 2015 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ஐ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் 100 கோடிகள் வசூல் கடந்து வெற்றி பெற்றுள்ளது. 

കൂടുതല്‍ കാണാം
Video Thumbnail

கார்த்தி

கார்த்தி சிவகுமார் - தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர் ஆவார். இவர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் 100 கோடிகள் வசூல் கடந்து பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது. ஆனால் நாயகனாக இவர் நடித்துள்ள சர்தார் திரைப்படம் 100 கோடி வசூல் கடந்து பலர் மத்தியில் கொண்டாடப்படுகிறது.

കൂടുതല്‍ കാണാം
Video Thumbnail

ஜெயம் ரவி

ஜெயம் ரவி - இதுவரை இவர் மட்டும் நாயகனாக நடித்துள்ள எந்த படமும் 100 கோடிகள் வசூல் அள்ளியதில்லை. ஆனால் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி என தமிழ் திரை பட்டாளம் இணைந்து நடித்துள்ள பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களும் 100 கோடிகள் வசூல் அள்ளி சாதனை படைத்துள்ளது. 

കൂടുതല്‍ കാണാം
Video Thumbnail

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி - தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர் ஆவார். இவர் நாயகனாக நடித்துள்ள எந்த திரைப்படமும் இதுவரை 100 கோடிகள் வசூல் பெற்றதில்லை. அனால் குணச்சித்திர கதாபாத்திரம், வில்லன் மற்றும் துணை கதாபாத்திரங்களில் இவர் நடிக்கும் திரைப்படங்கள் வசூல் ரீதியாக பிரமாண்ட வெற்றி கண்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அருண் விஜய், சிலம்பரசன் என பல பிரபலங்கள் நடித்துள்ள செக்க சிவந்த வானம் திரைப்படம் 100 கோடிகள் வசூல் கடந்துள்ளது.

കൂടുതല്‍ കാണാം

Disclaimer

The images featured on this page are sourced from publicly available platforms, official press releases, and promotional materials. These images are published strictly for editorial, informational, and news reporting purposes under the principles of fair use.
We do not claim ownership of any images unless explicitly stated. All image copyrights belong to their respective photographers, production houses, or copyright holders.
If you are the rightful owner of any image and believe that its use on this website is unauthorized or objectionable, please contact us ([email protected]) with proper details. We will promptly review and remove the content if required.


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+