X
ഹോം ടോപ് ലിസ്റ്റിങ്ങ്‌

Superstar Rajinikanth: இன்றுவரை ரஜினியின் திரைவாழ்க்கையை காப்பாற்றிய முக்கிய இயக்குனர்கள் யார் யார் தெரியுமா?

Author: Sakthi Harinath | Updated: Monday, December 11, 2023, 02:15 PM [IST]

Superstar Rajinikanth: இன்றுவரை ரஜினியின் திரைவாழ்க்கையை காப்பாற்றிய முக்கிய இயக்குனர்கள் யார் யார் தெரியுமா? முழு பட்டியல் இங்கு உள்ளன. நடிகர் ரஜினிகாந்த் திரைவாழ்வில் ரஜினியோடு பணியாற்றி சூப்பர்ஸ்டார் திரைவாழ்க்கையை காப்பாற்றிய இயக்குனர்கள் பற்றி ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினி பேசியுள்ளார். தன்னை முன்னணி நடிகராகவே தமிழ் சினிமாவில் பணியாற்ற வைத்த இயக்குனர்களாக ரஜினி சொன்ன முக்கிய இயக்குனர்கள் பற்றிய முழு விவரங்கள் இந்த பட்டியலில் உள்ளது. முழு லிஸ்ட் இதோ.

Share:
cover image
எஸ் பி முத்துராமன்

எஸ் பி முத்துராமன் - 1980 முதல் 1990 வரை தமிழ் சினிமாவில் கொடிகட்டி பரந்த இயக்குனர்களில் தலை சிறந்தவர் ஆவார், எஸ் பி முத்துராமன். இயக்குனர் எஸ் பி முத்துராமன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து இதுவரை தமிழ் சினிமாவில் 24 திரைப்படங்களில் ஒன்றாக பணியாற்றி உள்ளனர். இவர்களது கூட்டணியில் வேலைக்காரன், மனிதன், ஆறில் இருந்து அறுபது வரை, முரட்டு காளை என பல வெற்றி திரைப்படங்கள் உருவாகி தமிழ் சினிமாவை கலக்கியுள்ளது. ரஜினியின் திரைவாழ்வில் மிக முக்கிய இயக்குனராக எஸ் பி முத்துராமன் உள்ளார்.

കൂടുതല്‍ കാണാം


கே பாலச்சந்தர்

கே பாலச்சந்தர், நடிகர் ரஜினியை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தி பெரிய அளவில் உயர்த்திய மிக முக்கிய இயக்குனர் ஆவார், கே பாலச்சந்தர். வில்லனாக அறிமுகமான ரஜினியை ஹீரோவாக மாற்றியது கே பாலச்சந்தர் தான். மேலும் ரஜினிக்கு தனித்துவமாக ஒரு ஸ்டைல் கொண்டு வந்து பல ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது கே பாலச்சந்தர். இதுவரை தமிழ் சினிமாவில் கே பாலச்சந்தர் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து 10 திரைப்படங்களுக்கு மேல் பணியாற்றி உள்ளனர். அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, தில்லு முல்லு, நெற்றிக்கண் என பல வெற்றி படங்களில் இவர்கள் பணியாற்றியுள்ளனர்.

കൂടുതല്‍ കാണാം

சுரேஷ் கிருஷ்ணன்

வீரா, பாட்ஷா மற்றும் அண்ணாமலை என வெற்றி படங்களின் மூலம் ரஜினியை ஸ்டைலிஷ் நாயகனாக மாற்றி ரசிகர்கள் மத்தியில் கொண்டாட வைத்தவர், இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணன். இந்த படங்களின் மூலம் நடிகர் ரஜினியை வேறு ஒரு பரிமாணத்தில் காட்டி ரசிகர்களின் ஆதரவில் மாபெரும் பிளாக்பஸ்டர் நாயகனாக உருவாக்கியவர், சுரேஷ் கிருஷ்ணன்.

കൂടുതല്‍ കാണാം


பி வாசு

சந்திரமுகி, குசேலன், மன்னன், பணக்காரன் என சூப்பர்ஸ்டார் ரஜினியின் திரைப்பயணத்தில் முக்கிய படங்களின் மூலம் கொண்டாட வைத்தவர், இயக்குனர் பி வாசு. மிக மோசமாக ரஜினியின் திரைவாழ்க்கையில் சந்திரமுகி படத்தின் மூலம் இமாலய வெற்றி படத்தினை கொடுத்தவர், பி வாசு. சூப்பர்ஸ்டார் ரஜினியாக ரசிகர்களிடம் பிரபலமாக்கிய முக்கிய இயக்குனர்களில் ஒருவர் தான், பி வாசு.

കൂടുതല്‍ കാണാം

மஹேந்திரன்

கை கொடுக்கும் கை, முள்ளும் மலரும் போன்ற ஜனரஞ்சமான படங்களின் மூலம் பட்டி தொட்டி என ரஜினியை பிரபலமாக்கிய இயக்குனர் ஆவார், மஹேந்திரன். இவர் இயக்கிய முள்ளும் மலரும் படம் இன்றும் பல பிரபலங்கள் மற்றும் இயக்குனர்கள் மத்தியில் கொண்டாடப்படுகிறது. பலருக்கு ஒரு நேர்த்தியான திரைக்கதை வடிவமைப்பு போன்ற பல விஷயங்களுக்கு இப்படம் எடுத்துக்காட்டாக உள்ளது.

കൂടുതല്‍ കാണാം


ராஜசேகர்

படிக்காதவன், மாப்பிள்ளை, தர்மதுரை போன்ற பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் மூலம் 1990களில் ரஜினியின் மார்க்கெட்டை பெரிய அளவிற்கு கொண்டு சென்றவர், இயக்குனர் ராஜசேகர். இவரின் ரஜினியின் நண்பர் மற்றும் சிறந்த தமிழ் பட இயக்குனர் ஆவார். 

കൂടുതല്‍ കാണാം

கே எஸ் ரவிக்குமார்

கே எஸ் ரவிக்குமார் - முத்து, லிங்கா, படையப்பா என ரஜினியின் திரைவாழ்வில் பல முக்கிய படங்களை இயக்கி பெரிய அளவில் பிரபலமாக்கியவர். ரஜினியை நகைச்சுவை மற்றும் அதிரடி நாயகனாக சித்தரித்து பல படங்களில் இயக்கி வெற்றி கண்டுள்ள இயக்குனர் ஆவார், கே எஸ் ரவிக்குமார். இவரது படங்களில் பெரிய அளவில் இன்றும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படுகிறது, கே எஸ் ரவிக்குமார் இயக்கிய படையப்பா.

കൂടുതല്‍ കാണാം


ஷங்கர்

ஷங்கர் - இந்தியா சினிமாவில் பிரமாண்ட முக்கிய இயக்குனர்களில் ஒருவர் ஆவார். எந்திரன், 2.0, சிவாஜி என சூப்பர் ஹிட் பிளாக்பஸ்டர் படங்கள் மூலம் தமிழ் சினிமாவை தலை நிமிர வைத்தவர், ஷங்கர். ரஜினியின் மார்க்கெட்யை இந்தியா அளவில் எடுத்து சென்ற பிரமாண்ட இயக்குனர் ஆவார், ஷங்கர். ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவான எந்திரன், 2.0 மற்றும் சிவாஜி திரைப்படம் 500 கோடிகள் வசூல் கடந்து சாதனை படைத்துள்ளது.

കൂടുതല്‍ കാണാം

பா ரஞ்சித்

பா ரஞ்சித் - காலா மற்றும் கபாலி திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் பணியாற்றி வெற்றி கண்டவர், இயக்குனர் பா ரஞ்சித். இவர் இயக்கிய கபாலி திரைப்படம் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற திரைப்படமாகும். இந்தியா, மலேசியா மற்றும் ஜப்பான் நாடுகளில் கபாலி திரைப்படம் பல கோடிகள் வசூல் செய்து பிரமாண்ட வசூல் சாதனை படைத்துள்ளது.

കൂടുതല്‍ കാണാം


கார்த்திக் சுப்பராஜ்

கார்த்திக் சுப்பராஜ் - அதிரடி ஆக்ஷன் இயக்குனராக பல ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படும் முக்கிய இயக்குனர்களில் ஒருவர், கார்த்திக் சுப்பராஜ். 2019ஆம் ஆண்டு ரஜினியோடு கூட்டணி அமைத்து இவர் இயக்கிய பேட்ட திரைப்படம் பெரிய அளவில் ரஜினி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வெற்றி பெற்ற திரைப்படமாகும். இப்படத்தில் இடம்பிடித்த பாடல்கள் மற்றும் வசனங்கள் என அணைத்தும் ரஜினியின் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இப்படத்தின் மூலம் நடிகர் ரஜினிக்கு இஷ்டமான தமிழ் இயக்குனர் பட்டியலில் கார்த்திக் சுப்பராஜ் இடம் பிடித்துள்ளார்.

കൂടുതല്‍ കാണാം

நெல்சன் திலீப்குமார்

நெல்சன் திலீப்குமார் - சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படத்தினை இயக்கி தமிழ் சினிமாவில் கொண்டாடப்படுகிறார். இவர் இப்படத்திற்கு முன் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கி பலர் மத்தியில் அறியப்பட்டுள்ளார். ஜெயிலர் திரைப்படத்தின் கதை மற்றும் ரஜினிகாந்த் நடித்துள்ள கதாபாத்திரத்தின் வடிவமைப்பு என பல அம்சங்களில் நெல்சன் ஸ்டைல் ரஜினியை கவர்ந்துள்ளது. இதன் மூலம் தன்னை வேறு ஒரு புதிய பரிமாணத்தில் காட்டிய முக்கிய இயக்குனர் பட்டியலில் நெல்சன் உள்ளார் என ஜெயிலர் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் ரஜினி கூறியுள்ளார்.

കൂടുതല്‍ കാണാം


Disclaimer

The images featured on this page are sourced from publicly available platforms, official press releases, and promotional materials. These images are published strictly for editorial, informational, and news reporting purposes under the principles of fair use.
We do not claim ownership of any images unless explicitly stated. All image copyrights belong to their respective photographers, production houses, or copyright holders.
If you are the rightful owner of any image and believe that its use on this website is unauthorized or objectionable, please contact us ([email protected]) with proper details. We will promptly review and remove the content if required.


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+